சென்னை:தமிழக ஆளுநர் வித்தியாசகர் ராவை சந்தித்து, தனக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏ-க்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரிமை கோரினார்.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு  தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் சட்டமன்ற குழுத் தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து, தன்னை சந்திக்க வருமாறு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன்படி கூவத்தூரில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது தனக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏ-க்களின் பட்டியலை ஆளுநரிடம் அவர் கொடுத்தார். இதனையடுத்து ஆளுநர் மாளிகையில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் கூவத்தூர் புறப்பட்டுச் சென்றார்.

Advertisements