சென்னை:சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி கோர வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், முதன் முதலாக இந்த வழக்கைத் தொடர்ந்த சுப்பிரமணியன்சாமி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பார்த்ததுதான் என தெரிவித்துள்ளார். எனினும் இதனை மறுபரிசீலனை செய்யும்படி கோர சசிகலா தரப்புக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisements