சென்னை:சட்டப்பேரவையில் என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”புதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக சார்பில் வாழ்த்துக்கள். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று அவரது அரசு நிலைக்குமா என்பது எனக்குத் தெரியாது.

சனிக்கிழமை நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் என்னையும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களையும் பார்த்து முதல்வர் சிரிக்க வேண்டாம்” என்றார்.

ஸ்டாலினை பார்த்து ஓபிஎஸ் சிரித்தார் என சசிகலா குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து தன்னை பார்த்து எடப்பாடி பழனிசாமி சிரிக்க வேண்டாம் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements