சென்னை: தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்ற மத்திய அரசு உதவ வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பி உள்ளார். தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்க உதவ வேண்டும் என்றும் முதலமைச்சர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் பொறுப்பேற்றதற்கு தொலைபேசி மூலம் பிரதமர் வாழ்த்து தெரிவித்ததற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisements