சென்னை:முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக பன்னீர்செல்வம் தரப்பு மதுசூதனன் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.இந்நிலையில் அதிமுக கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோரை நீக்கி பன்னீர்செல்வம் தரப்பு மதுசூதனன் உத்தரவிட்டுள்ளார். மேலும் தம்பிரை, தங்கமணி, பா.வளர்மதி, நவநீதிகிருஷ்ணனும் அதிமுக-வில் இருந்து நீக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்திருந்தார். இந்த நிலையில் மதுசூதனன், சசிகலாவையும் அவரது ஆதரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் நீக்குவதாக அறிவித்துள்ளார்.

Advertisements