சென்னை:அஜித் விஜய் எப்போதுமே நல்ல நண்பர்கள் என்பது வெளியே பலருக்கும் தெரிவதில்லை. இவர்களின் நட்புக்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் இவர்களது சில ரசிகர்கள் தான் இன்னும் அது தெரியாமல் ஒருவருக்கொருவர் சமூகவலைதளங்களில் வார்தை மோதலில் ஈடுபடுகிறார்கள்.

அஜித் எப்பவுமே ரிஸ்க் எடுத்து நடிப்பவர். ஆரம்பம் படத்தில் கார் சேஸிங் சண்டைக்காட்சியில் நடித்திருந்தார். அப்போதும் அடிபட்டது.

அதுபோல வேதாளம் படத்தின் கடைசி கட்டத்தில் அவருக்கு அடிபட்டாலும் வலியோடு ஷூட்டிங்கை முடித்துகொடுத்து பின் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.இப்போது விவேகம் படத்திலும் 29 வது மாடியிலிருந்து டூப்பில்லமாமல் குத்திதுள்ளாராம். யூனிட்டில் இருந்தவர்கள் அவருக்கு ரிஸ்க் எடுப்பதில் இவ்வளவு ஆசையா என பேசிக்கொண்டார்கள்.

விஜயும் அப்படித்தான். அவரின் பல படங்களில் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். இப்போது அட்லீ இயக்கும் படத்தில் ஃபிளாஸ் பேக் சண்டைக்காட்சிக்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம்.

Advertisements