சென்னை: ஜெர்மனியை சேர்ந்த தனியார் ஆடை மற்றும் காலணி தயாரிப்பு நிறுவனமான பூமாவுடன் ரூ.110 கோடி மதிப்பிலான விளம்பர ஒப்பந்தத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கையெழுத்திட்டுள்ளார்.

இதன்மூலம் ஒரே நிறுவனத்துடன் நூறு கோடிக்கும் அதிகமான தொகையில் விளம்பர ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராத் கோலி பெற்றார். ஜெர்மனியைச் சேர்ந்த பூமா நிறுவனத்தின் லைஃப்ஸ்டைல் தயாரிப்புகளுக்கான விளம்பர தூதுவராக கோலி, அடுத்த 8 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கோலி, பூமா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள உசைன் போல்ட், அசாபா பவுல் மற்றும் தியர்ரி ஹென்றி உள்ளிட்ட சிறந்த வீரர்களுடன் இணைவது மிகப்பெரிய கவுரவம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisements