சென்னை: மார்ச் 8 ம் தேதி வரும் சர்வதேச பெண்கள் தினத்தை விமர்சையாக கொண்டாடவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘ஆணும் பெண்ணும் சமம்’ என்னும் கருத்தை வலியுறுத்தி பிரச்சாரமும் தொடங்கப்பட்டுள்ளது.இதில் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஆன விராட் கோலி மற்றும் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்கின்றனர். நடிகை பிரியங்கா சோப்ரா, முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோர் மார்ச் 8-ம் தேதி வரை சமூக வலைதளங்களில் நடைபெறும் பிரச்சாரத்தில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

இதற்கான பிரச்சாரத்தை சமூக வலைத்தளங்களில் மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி சமீபத்தில் தொடங்கி வைத்தார். வரும் நாட்களில் ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தியும் பெண்களுக்கான கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisements