சென்னை: மார்ச் மாதம் 2018 வரை ஜியோ சேவையை இலவசமாக பெறலாம் என்று ஜியோ நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதள கணக்கின் மூலம் பேசிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக ஜியோ பிரைம் மெம்பர்ஷிப் புரோகிராம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். அதில் 99 ரூபாய் செலுத்தி இணைந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். மாதந்தோறும் 303 ரூபாய் மட்டும் செலுத்தி தற்போதைய சேவையை 2018 மார்ச் வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அம்பானி குறிப்பிட்டுள்ளார். ஜியோ சேவை தொடங்கிய 170 நாட்களில் 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி வருவதாகவும், சராசரியாக ஒவ்வொரு வினாடிக்கும் 7 வாடிக்கையாளர்கள் ஜியோ திட்டத்தில் இணைவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

Advertisements