சென்னை: விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஜார்க்கண்ட் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் அணிகளுக்கான விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் நாடுமுழுவதும் பிப்ரவரி 25ம் தேதி தொடங்குகிறது. ஜார்க்கண்ட் அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் கடந்த இருமுறை விளையாடியுள்ள தோனி, அந்த அணிக்கு கேப்டனாக செயல்படவில்லை. வேகப்பந்து வீச்சாளரான வருண் ஆரோன் தலைமையில் அவர் போட்டிகளில் பங்கேற்றிருந்தார். இந்தநிலையில், நடப்பு தொடருக்கான ஜார்க்கண்ட் அணியின் கேப்டான தோனி செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் புனே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் சமீபத்தில் நீக்கப்பட்டார். இதேபோல, பஞ்சாப் அணிக்கு ஹர்பஜன் சிங் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisements