சென்னை: மாதவன் – விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விக்ரம் வேதா’ படத்தின் டீஸர் இணையத்தை மிரட்டி வருகிறது.இப்படத்தினை புஷ்கர்- காயத்ரி இயக்குகிறார்.

‘ஓரம் போ’, ‘வா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இணை புஷ்கர் – காயத்ரி. இவர்கள் தற்போது ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கி முடித்துள்ளார்கள். படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். வினோத் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு சாம் இசையமைத்துள்ளார். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது.

காவல்துறை அதிகாரியாக மாதவனும், தாதாவாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. இத்திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Advertisements