சென்னை: ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் தேதியில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஆசிரியர் பணியிடங்கள் தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு ஏப்ரல் 29 ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு ஏப்ரல் 30 ஆம் தேதியும் நடைபெறும் என கூறினார்.

Advertisements