சென்னை: எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் கொடியை மறைந்த முன்னாள் முதல்வர் அயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறுமுகப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், இரட்டை இலையை மீட்டு தமிழகத்தை நிலைநிறுத்துவதே எங்கள் நோக்கம் என்றும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை தொடர்வோம் என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் தீபா தெரிவித்துள்ளார்.

மேலும், தான் ஆர்.கே நகரில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று ஆசியாவில் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

Advertisements