சென்னை: சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்வுகள் தமிழ்நாட்டை உலகளவில் தலைகுனிவை ஏற்படுத்தியிருப்பதாகவும், தமிழகத்தில் விரைவில் நிலையான ஆட்சி அமையும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈஷா யோக மையத்தில் நடைபெறும் ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வந்ததாகவும், சிலை திறப்பு விழாவுக்கு வருகை தரும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தாம் ஏற்கவில்லை என்றும் கூறினார்.

30 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடைபெற்று கொண்டிருக்கிறது. மாற்றங்கள் எதுவாயினாலும் மக்களுக்கு நல்லவையாக இருக்கவேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisements