சென்னை: ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி 2 படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாகுபலி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவர் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.

முதல் பாகத்தை போன்றே இரண்டாம் பாகமும் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகிறது. இந்நிலையில் சிவராத்திரி நாளான இன்று படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் போஸ்டர் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இயக்குனர் ராஜமவுலி கூறியிப்பதாவது,

மோஷன் போஸ்டர்… பலி பலி பலி ரா பலி… சாகோரே பாகுபலி…

இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisements