சென்னை: வரும் 28-ம் தேதி நடிகர் தனுஷ் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று கூறி, மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதனை ரத்து செய்யக்கோரி தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நடிகர் தனுஷ் தரப்பிலும், அவரை மகனாக உரிமை கோரும் கதிரேசன் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த ஆவணங்களின் அடிப்படையில், அங்க அடையாளங்கள் கண்டறிவதற்காக நடிகர் தனுஷ் வரும் 28-ம் தேதி மதுரை கிளையில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவிட்டார்.

Advertisements