சென்னை: சில நிமிடங்களில் ‘ஆதார்’ எண் அடிப்படையில் ‘பான்’ எண் பெற விரைவில் மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

வருமான வரி செலுத்துவது, வருமான வரி கணக்கு விபரங்களை சரி பார்ப்பது போன்றவற்றுக்காகவும், விரைவில் புதிய, ‘மொபைல் ஆப்’ அறிமுகம் செய்யப்படவுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதைத் தவிர, ஆதார் எண்ணை பயன்படுத்தி, புதிய பான் கார்டை, இந்த ஆப் மூலம், சில நிமிடங்களிலேயே பெறும் வாய்ப்பும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும் , நிதியமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும், இந்த, ‘ஆப்’ அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements