சென்னை: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான பேட்டிங்கே தோல்விக்கு காரணம் என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

புனேவில் நடந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராத் கோலி தலைமையில் சொந்தமண்ணில் இந்திய அணி பெற்ற முதல் தோல்வியாகும். போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோலி, எவ்வாறு பேட்டிங் செய்யக்கூடாது என்பதற்கு இன்றைய போட்டியே சான்று என்று குறிப்பிட்டார். முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் முன்னிலை கொடுத்தது மிகப்பெரிய தவறு என்று கூறிய கோலி, அதுவே பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டதாகத் தெரிவித்தார். தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தின் மூலம் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கோலி குறிப்பிட்டார்.

Advertisements