சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் போராட்டம் நடித்திவருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க ஜெம் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாவதுடன், அப்பகுதிவாசிகளுக்கு தலைவலி, தலைசுற்றல், சுவாசக் கோளாறு, சுயநினைவு இழத்தல், இவ்வளவு ஏன் மரணம் கூட ஏற்படலாம் என்று கூறி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மனிதகுலத்துக்கு பேரழிவு நிச்சயம் ஏற்படும் என்றும் பின்னர் வருங்காலத்தில் நாமும் அகதிகள் போல் வேறு இடங்களுக்கு புலம்பெயரும் நிலையும் ஏற்படலாம் என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. விவசாயம் வீட்டுமனைகளாலும், வறட்சியாலும், மீத்தேன் திட்டத்தாலும் அழியாமல் தடுத்த நமக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விரட்ட முடியாதா என்றும் இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை அழிக்கக் கூடாது என்றும் மக்கள் போராடி வருகின்றனர்.

இப்போராட்டத்தில் புதுச்சேரி மாணவர்கள் மற்றும் சென்னை நெட்டிசன்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் போராடி வருகின்றனர்.

Advertisements