சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கவிடாமல் விவசாயிகள் மற்றும் நெடுவாசல் மக்களை காக்க வேண்டும் என்று நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் இளைஞர்கள் அமைதியான வழியில் புரட்சி நடத்தினார்கள். அந்த புரட்சிக்கு முழு ஆதரவு அளித்தவர் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்.

ஜல்லிக்கட்டுக்காக பாடல் எல்லாம் வெளியிட்டு தமிழக இளைஞர்களின் மனம் கவர்ந்தார். இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ள நெடுவாசல் விவசாய கிராமத்திற்கும், விவசாயிகளுக்கும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் ஜி.வி.

இது குறித்து நடிகர் ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: நெடுவாசலை காக்கவும், விவசாயிகளை காக்கவும், தமிழகத்தை காக்கவும்.

இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisements