சென்னை: மக்களின் எதிர்ப்பை மீறி எந்தவொரு திட்டத்தையும் தமிழகத்தில் கொண்டு வருவது வரவேற்கத்தக்கதல்ல என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளை பாதிக்கும் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தமிழகத்தில் மட்டுமே கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். இதுபோன்ற திட்டங்களை கொண்டு வரும் முன்பாக, அவற்றின் நன்மை, தீமைகளை மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும், சந்தேகமின்றி மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தேமுதிக போன்ற கட்சிகள் இதுபோன்ற திட்டங்களை ஆதரிக்கும் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisements