திருச்சி: ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளும் முன்பே, அதை எதிர்க்கக் கூடாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடன் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு நேர்மாறான தக வல்கள் தற்போது பரப்பப்பட்டு வருகின்றன. இத்திட்டம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்வ தற்கு முன்பே எதிர்க்கக் கூடாது. விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறான எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது.

தமிழகத்துக்கு எந்தத் திட்டம் வந்தாலும், அது நல்லதா? கெட் டதா என்பதை தெரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும். ஆரம் பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தால், அது தமிழகத்துக்கு செய்யக் கூடிய மிகப் பெரிய துரோகமாகும். இதற்காக, ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தே ஆக வேண்டும் என சொல்லவில்லை. யாரோ சொல் வதைக் கேட்டுக்கொண்டு தமிழ் சமுதாயம் சீரழிந்துவிடக் கூடாது.

சமூக வலைதளங்களில் நல்லதா? கெட்டதா என்பது பற்றி கவலைப்படாமல், மனதுக்கு தோன்றியதையெல்லாம் பதிவு செய்கின்றனர். இவ்வாறு தவறான பிரச்சாரம் செய்பவர்கள் மீது நட வடிக்கை எடுப்பதில் தவறில்லை. ஆட்சியாளர்களை விமர்சிப்பவர் கள் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினருக்கும் பாரபட்சமின்றி இந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Advertisements