சென்னை: துர்க்மேனிஸ்தான் நாட்டில் 40 ஆண்டுகளுக்கு முன்னாள் தோண்டப்பட்ட மீத்தேன் கிணறு, இன்றும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது.

துர்க்மேனிஸ்தான் நாட்டில் 40 ஆண்டுகளுக்கு முன்னாள் தோண்டப்பட்ட மீத்தேன் கிணறு, இன்றும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது. ஏறக்கொறைய 40 ஆண்டுகள் முன்பு சோவியத் குழு இயற்கை வாயு தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது பாலைவனத்தின் நடுவே தோண்டப்பட்ட மீதேன் கிணறு துரதிஷ்ட வசமாக விபத்திற்கு உள்ளாகி 20 மீட்டர் அகளத்தில் 10 மீட்டர் ஆழமான பள்ளம் ஏற்பட்டது. அந்த ஓட்டை வழியாக மீதேன் பரவக்கூடும் என்று அச்சம் கொண்டனர். எனவே வாயுவை அகற்ற அந்த கிணற்றுக்கு தீ வைக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் அது சிரிது நேரத்தில் அனைத்துவிடும் என்று எண்ணினார் . ஆனால் அது இன்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. “தி டோர் டு ஹெல்” என்ற பெயரில் இன்று உலகில் ஒரு சுற்றுலா தலமாகவே மாறியுள்ளது.

Advertisements