சென்னை: பாகுபலி 2 படத்தின் ட்ரைலர் தாமதமாக காரணம் அனுஸ்கா தான் என்று அப்படத்தின் இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தின் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ட்ரெய்லர் மட்டும் இன்னும் ரிலீஸாகவில்லை. விசாரித்தால் அதற்கு அனுஷ்கா தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. அதாவது முதல் பாகத்தில் இருந்தது போன்று இல்லாமல் அனுஷ்கா தற்போது குண்டாகிவிட்டார். அதனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு கூடுதலாக விஎப்எக்ஸ் தேவைப்படுகிறதாம். இந்த தகவலை ராஜமவுலியே உறுதிபடுத்தியுள்ளார். இருப்பினும் ட்ரெய்லர் தாமதத்திற்கு அனுஷ்காவின் வெயிட் மட்டுமே காரணம் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடையை கூட்டிய அனுஷ்காவால் தற்போது எடையை குறைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements