அமெரிக்கா: அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா, பிரான்ஸ் நாட்டுக்கு அதிபராக வரவேண்டும் என்று பிரான்ஸ் நாட்டின் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஒபாமா போட்டியிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக ஒபாமா – 2017 என்ற வாசகத்துடன் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். நடைமுறையில் பிரான்ஸ் அதிபர் பதவிக்கு ஒபாமா போட்டியிடுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றாலும், இந்த பரப்புரை மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரான்ஸில் நம்பிக்கையான தலைவர்கள் குறைந்துவிட்டனர் என்பதைக் காட்டும் வகையில் இந்தப் பரப்புரை அமைந்திருப்பதாகவும் கருத்து உருவாகியிருக்கிறது. தற்போதைய கருத்துக் கணிப்புகளின்படி, தீவிர வலதுசாரியான லே பென், அதிபர் தேர்தலில் முந்துவதாகக் கூறப்படுகிறது.

Advertisements