சென்னை: தோனியின் கிரிக்கெட் பார்ப்பதற்கு உற்சாகமளிக்கக் கூடியது என்றும், தோனி உலகிலேயே மிக சிறந்த கேப்டன் என்று ஆக்ரோஷ ஆஸி. விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் ஆடம் கில்கிறிஸ்ட் புகழாரம் சூட்டியுள்ளார்.

மும்பை மிரர் இதழுக்கு கில்கிற்ஸ்ட் கூறும்போது, “பேட்டிங், கீப்பிங், தலைமைத்துவம் ஆகியவற்றைச் சேர்த்துப் பார்ப்பது மிக்கக் கடினமானது. எனவே தலைமைத்துவத்தை துறந்தது பற்றி தோனி அதிகம் கவலைப்படமாட்டார் என்றே நான் நினைக்கிறேன்.

கிரிக்கெட்டில் என்னவெல்லாம் சாதிக்க முடியுமோ அனைத்தையும் தோனி சாதித்து விட்டார். ஒருவர் வெற்றி பெறக்கூடிய அனைத்து கோப்பைகளையும் அவர் வென்று விட்டார். தற்போது தன் மீது பெரிய கவனக்குவிப்பு இல்லாததை அவர் தற்போது விரும்புகிறார் என்றே கருதுகிறேன். கடந்த 10-15 ஆண்டுகளில் பார்ப்பதற்கு உற்சாகமூட்டக்கூடிய ஒரு வீரர் தோனி என்பதில் எந்த ஐயமும் இல்லை” என்றார்.

புனே வெற்றி எதிர்பாராதது, அதுவும் 3 நாட்களுக்குள் என்பது நிச்சயமாக எதிர்பார்க்க முடியாததே. ரென்ஷா, ஹேண்ட்ஸ்கம்ப் ஆகியோர் அனுபவமற்றவர்கள் என்று நினைத்தேன் ஆனால் இருவரும் அபாரமாக தங்களை தயாரித்துக் கொண்டுள்ளனர். அதுவும் தரமற்ற ஒரு பிட்சில் இவர்களது அணுகுமுறை பாராட்டுக்குரியது. இந்தியாதான் இன்னமும் கூட இத்தகைய பிட்ச்களில் நன்றாக ஆடக்கூடியவர்கள், அவர்கள் நிச்சயம் கருவிக்கொண்டிருப்பார்கல். நிச்சயம் ஆஸ்திரேலியாவை வீழ்த்த தயாராகவே இருப்பார்கள்.

Advertisements