சென்னை: ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலால் திமுக-விலிருந்து விலகிய நடிகர் ராதாரவி செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் முன்னிலையில் திமுக-வில் மீண்டும் இணைந்துள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக-வில் இணைந்தபின் எனது குடும்பத்துக்குள் வந்ததுபோல் உணர்கிறேன். தமிழ்நாட்டை காப்பாற்ற ஸ்டாலினால்தான் முடியும். அவரது பிறந்தநாள் கூட்டத்தில் எனது கருத்துகளை தெரிவிப்பேன். அதிமுக சிதறு தேங்காயைப் போல் உடைந்து விட்டதால் தமிழகத்தை திமுக-வால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.

நடிகர் சரத்குமாருடன் இணைந்து நடிகர் சங்கத்தில் செயல்பட்ட ராதாரவியை நடிகரும் எம்.எல்.ஏ.,வுமான வாகை சந்திரசேகர் திமுக-வில் இணைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். ராதாரவியை நடிகர் சங்க விவகாரத்தில் கோர்ட்டுக்கு இழுத்த திமுக-வைச் சேர்ந்த பூச்சி முருகன் வருத்தத்தில் இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை.

Advertisements