சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மிகக் குறைந்த நிலப் பரப்பே பயன்படுத்தப்படும் என்றும் இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இத்திட்டம் தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழகம், புதுச்சேரியைச் சேர்த்து மொத்தம் 300 கோடி ரூபாயும், தமிழகத்திற்கு 40 கோடி ரூபாயும் வருமானம் கிடைக்கும் என்பதுடன், இத்திட்டத்தால் கூடுதலாக 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மிகக் குறைந்த நிலப் பரப்பே பயன்படுத்தப்படும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 700 இடங்களில் இத் திட்டத்திற்காக ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisements