ஆப்கானிஸ்தான்: ஆஃப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் காவல் நிலையத்தில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதையொட்டி போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பல மணிநேரம் சண்டை நீடித்தது.

காபூல் நகரில் உள்ள காவல் துறை புலனாய்வுத் தலைமையகத்தை இலக்காகக்கொண்டு இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.

இதையடுத்து போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் தரை வழியாக பயங்கர துப்பாக்கி சண்டை மூண்டது.

இதற்கிடையே காபூல் நகரின் மேற்குப் பகுதியில் ஒரு குண்டு வெடித்தது. அந்த சத்தம் நகரின் மற்றொரு புறம் வசித்து வந்த பொதுமக்களுக்குக் கேட்கும் வகையில் பயங்கரமாக இருந்தது.

இதே போல் மேலும் சில பகுதிகளிலும் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால் பல இடங்களில் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இந்த தாக்குதலில் 35 பேர் பலத்த காயமடைந்ததாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisements