தேனி: ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான போலீஸ்காரர் வேல்முருகன்.இவர் தேனி மாவட்டம் காவல் துறையில் பணியாற்றி வருகிறார்.

ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான வேல்முருகன் உயரமான இடத்தில் இருந்து குதிப்பது,அதிபயங்கர ஆபத்தான ஆற்றில் வெகு தூரம் நீந்தி கடந்து செல்வது ,ஜெ வின் பிறந்தநாளுக்கு இனிப்பு கொடுப்பது முதல் ஜெ சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற போது காவல்துறை சீருடையிலே பொது இடத்தில் தீக்குளிக்க முயன்றது என்று பல்வேறு சம்பவங்களை செய்திருக்கிறார். இவர் ஒரு விளையாட்டு வீரரும் கூட ஜெவின் கையால் பரிசும் வாங்கியிருக்கிறார்.ஜெ மரணமடைந்த பிறகு சசிகலாவை கடுமையாக விமர்சித்ததாக தேனி மாவட்ட அதிமுகவினர் புகார் கூறியதால் கடந்த 28 ம் தேதி இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்று திடீரென்று ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இருக்கிறது என்று சொல்லி உடனடியாக அதிமுக அரசு மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை களைய வேண்டும் என்ற கோரிக்கையோடு தேனி மாவட்டம் குமுளியில் உள்ள லோயர் கேம்ப் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.(இந்த மணி மண்டபத்தை ஜெ நேரில் வந்து திறந்து வைத்தார்)மின்னம்பலத்திற்காக நம்மிடம் பேசியவர்,” இதுவரை 18 உலக சாதனைகள் செய்திருக்கேன்.பல்வேறு சாதனைகள் செய்ததிற்கு அம்மா ஜெயலலிதா கையால் விருதுகள் வாங்கியிருக்கிறேன்.

பெற்றவர்.இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நீந்தி சென்றியிருக்கேன்.81 நாள் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் ஓடியிருக்கிறேன்.ஒற்றைக்காலில் 89 மணி நேரம் நின்றியிருக்கிறேன்.இப்படி பல்வேறு சாதனைகள் செய்தேன்.ஆர்.கே நகரில் அம்மா வெற்றி பெற்ற பொழுது மொட்டையடித்தேன்.எனது பணியை ராஜினாமா செய்துவிட்டு அம்மாவிற்குகோயில் கட்டி பராமரிப்பு செய்ய ஆசையிருக்கிறது.

அம்மாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் இன்று அய்யா பென்னிகுக் முன்பு உண்ணாவிரத போராட்டம் செய்தேன்.போலீசார் கைது செய்து இப்போதுதான் விடுவித்தனர்.இருந்தாலும் என் போராட்டம் ஓயாது.எனக்கு நீதி வேண்டும்” என்றார்.காவல்துறையை சேர்ந்தவர் ஒருவரே சீருடையில் உண்ணாவிரதம் இருந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

Advertisements