சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு ,ஹைட்ரோ கார்பன் தடை ஆகிய முக்கிய பிரச்னைகள் உள்பட 24 சம்பவங்கள் குறித்து பிரதமரிடம் பேச தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி பிரதமரை சந்தித்து விட்டு வந்தார்.

பள்ளி இறுதியாண்டு மாணவர்கள் தரப்பில் நீட் தேர்விற்கான விண்ணப்பிக்க இறுதி நாள் , டெல்டா மாவட்டங்களில் தீவிரமடைந்து வரும் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டம் என்று தமிழகமே பிரதமர் மோடி ,எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு குறித்து தீவிரமாக யோசித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு பலன் கொடுக்குமா இல்லை நெடுவாசல் வாடிவாசல் போராட்டம் போல் ஆகுமா என்று தமிழகமே தகித்துக்கொண்டு இருக்கிறது.

டெல்லியில் பிரதம அலுவலக வட்டாரங்களில் பேசிய பொழுது ‘ பிரதமர் மோடி ,பழனிச்சாமிக்கு பெரியதாக ஆதரவு அளிக்கவில்லை. கடந்த முறை பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த போது பிரதமர் மோடியை பன்னீர் செல்வத்தை சந்திக்க வந்த பன்னீர்செல்வத்திற்கு நல்ல முறையில் ஆதரவு அளித்து நீண்ட நேரம் பேசினார்.பன்னீரிடம் மட்டும் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக தனிமையில் பேசிய மோடி ராஜினாமா செய்ய வேண்டாம் உள்பட பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசியவர் ஜல்லிக்கட்டு நடத்த விரைவு மசோதவை கொண்டு வந்தார்.

இந்த முறை பழனிச்சாமி டெல்லியில் பிரதமரை சந்திக்க ஒருநாள் முன்பாகவே வந்து காத்திருந்தார். ஒருநாள் முன்பே வந்த பழனிச்சாமியினை சந்தித்த மோடி வெறும் 20நிமிடங்கள் மட்டுமே பேசியிருக்கிறார் மோடி. பழனிச்சாமி மோடியை கவர ஜெயலலிதாவிடம் காட்டும் பவ்வியத்தை போல நடந்து கொண்டியிருக்கிறார்.ஆனாலும் மோடி இதற்கு பிடி கொடுக்காமல் இருந்திருக்கிறார்.

பிரதம அலுவல செயலாளர்கள் யாரும் பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. மறுநாள் சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ,நகர்ப்புற அமைச்சர் வெங்கையா நாயுடு ,சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி ஆகியோரை எடப்பாடி சந்தித்த நிகழ்வுகளும் வெறும் ஐந்து நிமிடங்களுக்குள்ளே நடந்து முடிந்திருக்கிறது.இதனால் எடப்பாடி பயங்கர அப்செட்டில் இருந்திருக்கிறார்.இது டெல்லி பனிப்போர்!

அதிமுக எம்.பி களுக்குள் டெல்லி சென்ற முதல்வரை வரவேற்க ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பிகளான 11 எம்.பி செல்லாத நிலையில் மீதம் உள்ள 37 அதிமுக எம்.பி.களில் குறைந்த அளவான 19 எம்.பிகள் மட்டுமே சென்றார்கள். இந்த நிலையில் பிரதமரை சந்தித்து விட்டு தமிழகம் திரும்பிய முதல்வரை வழியனுப்ப சென்ற எம்.பி.களில் ஒரு சிலரே சென்றுள்ளனர். தம்பிதுரை வழியனுப்ப செல்லாமல் அவரது உதவியாளரை அனுப்பி இருக்கிறார்.ஏன் இந்த திடீர் பின்னடைவு என்று அதிமுக வட்டாரத்தில் பரபப்பாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

டெல்லி தமிழ்நாடு இல்ல கழிவறையில் தூத்துக்குடியை சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி.யான விஜிலா ஆனந்தும்,தென்காசி எம்.பியான வசந்தி முருகேசனும் யார் சீனியர் என்று கடினமான வார்த்தைகளால் மோதிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.ஏற்கனவே சசி அணி –பன்னீர் அணி என்று இரு அணிகள் இருக்கிற போது மேலும் இது போன்ற லோக்கல் பாலிட்டிக்ஸ் என்று கடிந்து கொண்டியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி .

Advertisements