சென்னை: பிளஸ் 2 தேர்வு எழுதச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நாளை தேர்வு என்பதால், தேர்வு எழுதச் செல்லும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான தேர்வு இந்த தேர்வு என்பதால், தாங்கள் அனைவரும் பெற்றோர்களின் ஆசீர்வாதத்தோடும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படியும், உறுதியான மனப்பான்மையோடு தேர்வுகளை எழுதி வெற்றிபெற்று, வாழ்க்கையில் எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று சிறப்புடன் வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

Advertisements