சென்னை: தனது 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் முதல்முறையாக அட்லி படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்கள் போக சத்யராஜ், வடிவேலு, சத்யன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வருவதாக தகவல் கசிந்துள்ளன.

ஒரு விஜய் அப்பா இரண்டு மகன்கள் என வரலாறு, 24 பாணியில் விஜய் நடிக்கிறாராம். இதில் 80-களில் மதுரையில் நடப்பது போன்ற காட்சிகள் முதல் ஷெட்யூலில் முடிந்துள்ளது. கிராமத்து திருவிழாவில் இடம்பெறுவதுபோன்ற பாடல் ஒன்று அண்மையில் படமாக்கப்பட்டது. அதே திருவிழா செட்டில் ஒரு சண்டைக்காட்சியும் படமாக்கப்பட்டது.

Advertisements