புதுக்கோட்டை: விவசாய நிலங்களில் ஹைட்ரோகார்பன் என்னும் மீத்தேன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை அருகிலுள்ள நெடுவாசலில் மக்கள் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக இரவு பகலாக போராடி வருகின்றனர். இதற்கு தமிழகமெங்கும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து நெடுவாசல் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று ‘ஒரு கனவு போல’ இசை வெளியீட்டு விழாவில்(அது படத்தின் பெயர்) பேசிய விஷால், விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், நெடுவாசலைக் காப்பாற்றுங்கள். அரசியல்வாதிகளுக்கு நான் இதை முக்கிய வேண்டுகோளாக முன்வைக்கிறேன். என் அலுவலகத்தில் நெடுவாசல் விவசாயிகள் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நான் அந்த விவசாயிகளுடன் இணைந்து நெடுவாசல் புறப்படுகிறேன்.

Advertisements