சென்னை: டெட் தேர்வுக்கு புதிய கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. அறிவித்துள்ளது. அதன் படி, ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்.

டெட் என்னும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29, 30ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 6 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான கால அவகாசம் 17 நாட்கள் மட்டுமே உள்ளது என தேர்வர்கள் அதிரிப்தி அடைந்தனர். அதைத் தொடர்ந்து, டெட் தேர்வு விண்ணப்பங்களில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து, டி.ஆர்.பி. தலைவர் காகர்லா உஷா, ” ’டெட்’ தேர்வின் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கு ஏப்ரல் 29, 30ல், தேர்வு நடக்கும். தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 6ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை வழங்கப்படும். அதன் படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெறப்படும். மையங்கள் குறித்த விவரங்கள் http://www.trb.tn.nic.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகும். ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். ஒவ்வொரு தாள் தேர்வுக்கும் தனியாக விண்ணப்பம் பெற வேண்டும். ஒரு மாவட்டத்தில் விண்ணப்ப படிவம் பெற்று எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் பூர்த்தி செய்து தரலாம்” என தெரிவித்துள்ளார்.

Advertisements