இந்தியா: கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆணடுக்கான விருதுகள் பெறும் வீரர்களை, பி.சி.சி.ஐ விருது கமிட்டி தேர்வு செய்து அறிவித்து வருகிறது.

இதில், சீனியர் பிரிவில் சிறந்த ஆட்டக்காரர்களுக்கு வழங்கும் மதிப்புமிக்க விருதான பாலி உம்ரிகர் விருதினை கேப்டன் விராட் கோலி பெறுகிறார். இதன்மூலம் மூன்றாவது முறையாக இந்த விருதை அவர் பெறுவது குறிப்பிடத்தக்கது. மூன்று முறை இவ்விருது பெறும் முதல் இந்திய வீரர் கோலி என்பதும் தான்.

சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு திலிப் சர்தேசாய் விருது வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இவ்விருதை பெற உள்ளார்.

மேலும் ரஜீந்தர் கோயல், பத்மாகர் ஷிவால்கர் ஆகியோர் கர்னர் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். பெண்கள் அணியின் கேப்டன் சாந்தா ரங்கசாமி பி.சி.சி.ஐ. வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். இதேபோல் உள்ளூர் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisements