சென்னை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக செய்ய முடியாத சாதனையை, விராத் கோலி செய்துள்ளார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 333 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதை தொடர்ந்து, இந்தியா கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்கள் பலர், இந்திய அணி ஆஸ்திரேலியாவை திருப்பி அடிக்கும் என கருத்து கூறியுள்ளனர்.

“இந்திய அணியின் கேப்டன் கோலி புனேவில் நடந்த இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவரும் மனிதன் தான். தோல்விகள் வரும். ஆனால் இந்த இந்திய அணி, அதிலிருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தும்,” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறினார்.

“ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கடந்த டெஸ்ட் தொடரில், அடுத்தடுத்து நான்கு சதங்களை விராத் விளாசியது அசாதாரமானது. நான் பார்த்த வீரர்களில் சச்சினை மிஞ்சும் அளவிற்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை விராத் வெளிப்படுத்தினர்” எனவும் கங்குலி புகழ்ந்தார்.

Advertisements