சென்னை: பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் பெப்சி, கோக் குளிர்பானங்களை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.ஜல்லிக்கட்டு பொராட்டத்தின் போது மாணவர்கள் தூவிய விதையின் விளைவாக பெப்சி, கோக் போன்ற அந்நிய நாட்டு குளிர் பானங்களை மார்ச் ஒன்றாம் தேதி முதல் விற்கப்போவதில்லை என வணிகர் சங்கங்கள் அறிவித்தன.

அதன் தொடர்ச்சியாக பன்னாட்டு நிறுவன ஊழியர்களும் பெப்சி கோக்கிற்கு எதிரான பரப்புரையில் இணைந்துள்ளனர். பல பன்னாட்டு நிறுவனங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு அந்நிய குளிர்பானங்களை புறக்கணிக்க வேண்டும் என பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. கிண்டியில் உள்ள பன்னாட்டு நிறுவ ஊழியர்கள் இன்று காலை தங்களது நிறுவணம் முன்பாக ஒன்று திரண்டு பெப்சி கோக்கை பயன்படுத்தப்போவதில்லை என உறுதி மொழி எடுத்தனர்.
மேலும் அந்நிய குளிர் பானங்களை தரையில் கொட்டி தங்களது எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.

Advertisements