சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்காது என்றும் மக்கள் விரும்பினால் இந்த திட்டத்தை நிறுத்த தயார் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். 15வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனிடையே, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் ஓசூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்காது என்றும், மக்கள் விரும்பினால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த தயார் என்றும் கூறினார்.

2007ல் வந்த திட்டத்துக்கு தற்போது எதிர்ப்பு ஏற்பட காரணம் தமிழக அரசின் பலவீனமே என்று குற்றம்சாட்டிய பொன்.ராதாகிருஷ்ணன், இந்த திட்டம் பற்றி மக்களுக்கு மாநில அரசு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

Advertisements