சென்னை: சென்னை தாம்பரம் விமானப் படைத்தளத்தில் வீரர்களுக்கு விருது வழங்கும் விழாவில் இந்தியா வலிமையான நாடக மாறி வருகிறது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

தாம்பரம் விமானப் படைத்தளத்தில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற குடியரசுத் தலைவர், பின்னர் அங்கிருந்த வீரர்கள் முன்னிலையில் உரையாற்றினார். தொழில்நுட்பத்தில் இந்திய விமானப்படை சிறந்து விளங்குவதாகவும். இந்தியா வலிமையான நாடாக உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய விமானப்படையின் திறன் இப்போது பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். பயங்கரவாத ஊடுருவல்களை முறியடிக்க ராணுவம் முழுக்கவனம் செலுத்துவதாகவும் இந்திய ராணுவம், எத்தகையச் சூழலையும் சமாளிக்கக் கூடியவை என்றும் பிரணாப் தெரிவித்தார்.

Advertisements