அசாம்: அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் நேற்று இரவு பிறந்த குழந்தை ஒன்றின் இதயம் உடலுக்கு வெளியே மார்பின் மீது இருப்பதால் ஆபத்தான சூழ்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு அசாம் மாநிலத்தில் உள்ள துப்ரி என்னும் மாவட்டத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு மிகவும் அபூர்வமான முறையில், பிறக்கும்போதே இதயமானது உடலுக்கு வெளியே மார்பின் மீது இருப்பதால் அக்குழந்தையின் பெற்றோர் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.

துப்ரி மாவட்டத்தில், கிராமத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு இதயமானது உடலுக்கு வெளியே இருந்ததால் அங்கிருந்த மருத்துவர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். பின்னர் அங்கிருந்து குழந்தைக்கு சிகிச்சையளிப்பதற்காக குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து குழந்தையானது மேல்சிகிச்சைக்காக கவுகாத்தி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் கூறும்போது, உறுப்பு இடம் மாறி குழந்தை பிறப்பது மிக மிக அரிதான குறைபாடுள்ள நோய் என்றும் இந்த நோய்க்கு Ectopia Cordis என்று பெயர் எனக்கூறினர்.

மேலும் குழந்தைக்கு அசாம் மாநில அரசு செலவில் பெங்களூவில் உள்ள நாராயணா ஹிருதயா மருத்துவமனையில் நாளை அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.

Advertisements