கர்நாடகா: கர்நாடகாவில், கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு தமிழ்ப் படம்கூட டப்பிங் செய்து வெளியாகவில்லை. அங்குள்ள அமைப்புகள் பல ஆண்டுகளாக தமிழ்ப் படங்கள் வெளியாவதை தடுத்து வருகின்றனர். இதிலுள்ள பல்வேறு தடைகளைத் தாண்டி அஜித்தின் என்னை அறிந்தால் படம் டப்பிங் செய்யப்பட்டு சத்யதேவ் ஐ.பி.எஸ் என்ற பெயரில் இன்று வெளியாகிறது.

இதுபற்றி தடைகளை உடைத்த அஜித் திரைப்படம்! என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில், இந்தப் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் ஒரு குழுவினர் இன்று சத்யதேவ் வெளியாகும் திரையரங்குகள்முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மேலும் பிரபல கன்னட நடிகர் ஜக்கேஷ், ‘சத்யதேவ் படத்தை கர்நாடக திரையரங்குகளில் வெளியிடக்கூடாது. அதையும் மீறி வெளியிடும் தியேட்டர்களை தீயிட்டுக் கொளுத்துவேன், அதற்காக சிறைக்குச் செல்லவும் தயார்’ என்றும் கூறியுள்ளார். நடிகர் ஜக்கேஷின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு கடும் விமர்சனத்தைப் பெற்றுள்ளது.

மேலும் வாட்டாள் நாகராஜ் தலைமையில் வரும் இம்மாதம் 11ஆம் தேதி இதற்காக பேரணி ஒன்றும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisements