சென்னை: கார், பைக் பந்தயத்தில் ஈடுபட்டால் வாகனத்தை பறிமுதல் செய்ய விரைவில் சட்டம் கொண்டு வர உள்ளதாக சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அபய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்மைக் காலமாக கார் மற்றும் பைக் பந்தயங்கள் சட்டவிரோதமாக நடைபெற்று வருகின்றன. இதனால் சாலை விபத்துகள் நிகழ்வதுடன், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. தற்போது இருக்கும் சட்டத்தில் கார் பந்தயத்தில் ஈடுபட்டால் 250 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரைதான் அபராதம் விதிக்கமுடியும். ஆனால் வாகனத்தை பறிமுதல் செய்ய வாய்ப்பில்லை.

எனவே தடையை மீறி கார், பைக் பந்தயத்தில் ஈடுபட்டால், அவற்றை பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அபய் குமார் சிங் கூறியுள்ளார். அதன்படி, மத்திய அரசு விரைவில் சட்டம் கொண்டு வர உள்ளதாகவும் அபய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisements