சென்னை: கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் மக்களின் அதிக வரவேற்பினை பெற்ற ஒரு போட்டியாக ஐ.பி.எல். திகழ்ந்து வருகிறது. பல்வேறு அணி வீரர்கள் ஒன்றாக ஒரே அணியாக விளையாடுவதால், இதன் வரவேற்பு பல்வேறு நாடுகளிலும் உள்ளது. அதன் தொடர்ச்சியாக வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி பெண்கள் தினத்தன்று பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

பெண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில வருடங்களாக நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில், இந்த முயற்சி ஒரு புதிய எதிர்பார்பினை ஏற்படுத்தும் என கூறலாம். வரும் 8ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கும் இந்த போட்டிகள் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் நடைபெறுமா? என்பது இனிமேல் தெரியவரும். அதேபோல் இந்த போட்டிக்கு இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில், அணிகள் தேர்வு இன்னும் நடைபெறவில்லை, இந்நிலையில் நாளை தேர்வு நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

Advertisements