சென்னை: பெரிய கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக நயன்தாரா நடிப்பில் தயாராகியுள்ள டோரா படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசர் வெளிவந்தபின் நயன்தாராவை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்கள் இணையதளங்களில்  அழைக்கத் தொடங்கியுள்ளனர். தற்போது இந்தப் படம் மார்ச் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தப் படத்தை ஆரோ சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் நயன்தாராவுடன் தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர். விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. இந்தப் படத்தை இயக்குனர் சற்குணம் தயாரித்துள்ளார். அவரது உதவியாளர் தாஸ் ராமசாமி இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார்.

Advertisements