புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் நெடுவாசலில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக ஓஎன்ஜிசி நிர்வாகமும், மத்திய அரசும் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

நெடுவாசலில் அமைதிவழியில் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், அங்கு போலீசாரை குவிப்பது அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாண்டியன் தெரிவித்தார்.

Advertisements