சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர். அதன் பின்னர் அவர் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். இன்று  காலை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர், வீரதீரச் செயல்களில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவிக்க உள்ளார்.

அதன் பின்னர், அடையாறில் நடைபெறும் மகளிர் சங்க விழாவிலும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements