இந்தியா: துரித உணவுக்குப் பெயர் போன சர்வதேச அளவிலான மெக்டொனால்ட் உணவில், உருளைக் கிழங்கு வறுவலுடன் பொறிக்கப்பட்ட பல்லி கிடந்ததாக புகார் எழுந்துள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் பிரியங்கா மொய்த்ரா என்பவர் மெக்டொனால்ட் உணவு பொருட்களை வாங்கியுள்ளார். அதில் உருளைக் கிழங்கு வறுவலுடன் பொறிக்கப்பட்ட நிலையில் பல்லி ஒன்று இறந்தது கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் காவல்நிலையத்தில் கடந்த செவ்வாய்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மெக்டொனால்ட் நிறுவனம் ஏன் இவ்வளவு அலட்சியமாக செயல்படுகிறது என்று அந்த பெண் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisements