இந்தியா: 10 ரூபாய் நாணயங்கள் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவை என்றும் அவற்றை பொதுமக்கள் தொடர்ந்து ஏற்கவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

நாணயங்கள் நீண்ட காலத்திற்கு புழக்கத்தில் இருக்கும் என்பதால் வெவ்வேறு வடிவங்கள், அளவுகளில் உள்ள நாணயங்கள் புழக்கத்தில் இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்து ரூபாய் நாணயங்கள் ரூபாய் குறியீட்டுடனும், ரூபாய் குறியீடு இல்லாமலும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவை சற்றே மாறுபட்டு தோன்றினாலும் இரண்டுமே சட்டப்படி செல்லுபடியாகக் கூடியவை என்று  விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Advertisements