சென்னை: தற்போது அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா “தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் நடித்துவருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படத்தில் நடித்து வருகிறார்.

இந்த மூன்று படத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது எது என்னவென்றால்.

அட்லீ – விஜய் படத்தில் சமீபத்தில் 80’s செட் அமைத்து படமாக்கப்பட்டது.

இதே போன்று 80’s நடக்கும் காட்சி சூர்யா நடிக்கும் “தானா சேர்ந்த கூட்டம்” படத்திலும் இருக்கிறது.

சிம்பு நடிக்கும் படத்தின் “மதுரை மைக்கல்” டீசர் முன்பே வெளியாகி 80’s காட்சிகள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இப்படி மூன்று படங்களிலும் 80’s காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எது ரசிகர்களை கவர்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisements